கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார்.
அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார். இவரது மறைவு காரணமாக தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.