2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றது. இந்த கூட்டணியில் ஆம் ஆத்மியும் இணைந்துகொண்டது.
இந்நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய்சிங் கூறுகையில் ; எங்கள் ஆம்ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்தியா கூட்டணி உருவானது. நாங்கள் இனி இந்த கூட்டணியில் இல்லை. என கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறி இருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.