‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபாஸின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பிரபாஸ் தலையில் முடி குறைவாக சொட்டை விழுந்தது போல் காட்சியளிக்கிறார்.நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர். மேலும் இப்படம் ஒரு ஏ.ஐ புகைப்படம் என தெரிய வந்துள்ளது.