‘கிழக்கு சீமையிலே’, ‘உழவன்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘சுயம்வரம்’, ‘அப்பு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த விக்னேஷ், தற்போது ‘ரெட் பிளவர்’ படத்தில் நடித்துள்ளார்.
பட விழாவில், விஷால் கலந்துகொண்டு பேசும்போது, அவரது கைகள் நடுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. விஷால் பேசும்போது, ‘மதகஜராஜா’ படவிழாவில் கைகள் நடுங்க நான் பேசிய வீடியோ வைரலானது. படமும் பெரிய ‘ஹிட்’டானது. இன்றைக்கு மீண்டும் கைகள் நடுங்க பேசுகிறேன். எனவே இந்த ‘ரெட் பிளவர்’ படமும் ‘ஹிட்’ ஆகும் என கூறியுள்ளார்.