தெலங்கானாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. சந்தூ ராதோட் (47), இன்று (ஜூலை 15) காலை பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவர் மீது மிளகாய்ப் பொடியை வீசி, துப்பாக்கியால் சுட்டு, தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சந்தூ ராதோட், சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.