சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த பால் வேன் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து விற்பனையாளர்களுக்கு பால் இறக்குமதி செய்யும் ஈச்சர் வேன் திருமங்கலத்தில் பாலை இறக்கிவிட்டு செல்லும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அண்ணாநகர் அருகே சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனின் முன் பகுதி முதுவதுமாக சுவற்றில் மோதி நொறுங்கியது. இதில் ஓட்டுநர் சதீஸ் மற்றும் உதவியாளர் ஆனந்த் ஆகியோர் வேனில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விபத்தில் சிக்கிய ஓட்டுனர் மற்றும் உதவியாளரை ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.