தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.