பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழ்பெற்றார். கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார்.
அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்தார்.
நடிகை சரோஜா தேவி இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.