Monday, July 14, 2025

பா. ரஞ்சித் ஷூட்டிங்கில் விபத்து!! பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பலி!!

தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங், கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கீழையூர் அருகே விழுந்தமாவடி என்ற கிராமத்தில் உள்ள பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த திரைப்படத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்… இவருக்கு வயது 52..

இந்த சூழலில், நேற்று ஜூலை 13 திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது காட்சி ஒன்றில் காரில் இருந்து மோகன்ராஜ் குதிப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த காட்சியில் கார் ஒன்றை மோகன்ராஜ் இயக்கினார்.. அந்த கார் உயரமாக பறந்தநிலையில் ,அவரது சீட் பெல்ட் அறுந்துதாகவும்,மோகன்ராஜ்-யின் நெஞ்சு காரின் முன்பகுதியில் அதாவது ஸ்டியரிங்-கில் அடிப்பட்டதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர் காரில் இருந்து வெளியே வரத நிலையில், அவரை படக்குழுவினர் மீட்டு, உடனடியாக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மோகன்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news