உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனம் அமேசான் நிறுவனம் தற்போது ‘அமேசான் நவ்’ (Amazon Now) சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவை 10 நிமிடத்தில் அவசியப் பொருட்களை டெலிவரி செய்யும். இந்த சேவை ஜெப்டோ, ப்ளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.
‘அமேசான் நவ்’ சேவை முதலில் பெங்களூருவில் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது டெல்லியின் சில இடங்களில் சேவை செயல்பட்டு வருகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என அமேசான் அறிவித்துள்ளது.