மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் ஆட்சி பொறுப்பு குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அது தான் முடிவு. அவர் சொல்வதுதான் வேதவாக்கு.
இந்த அரசுக்கு தமிழக மக்கள் மீது எந்த நலனும் இல்லை. இந்த அரசு எல்லா துறையிலும் தோல்வி அடைந்து விட்டது.
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேறும் சூழலில் இருக்கிறது. திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைய போகிறது. எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது.