கிரெடிட் கார்டு வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சந்தையில் பல்வேறு வகையான கேஷ்பேக் மற்றும் சிறப்பு ஆஃபர்களை வழங்கும் கார்டுகள் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த கார்டை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.
இதில், முக்கியமான கேஷ்பேக் ஆஃபர்களை வழங்கும் சில கிரெடிட் கார்டுகள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
SBI கேஷ்பேக் கார்டு: ஆன்லைன் செலவுகளுக்கு 5% கேஷ்பேக், ஆஃப்லைன் செலவுகளுக்கு 1% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. வியாபாரி சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லை.
ஆக்சிஸ் வங்கி Ace கிரெடிட் கார்டு: Google Pay மூலம் பில் பேமெண்ட்களுக்கு 5% கேஷ்பேக், Swiggy, Zomato, Ola-க்கு 4% கேஷ்பேக், மற்ற செலவுகளுக்கு 1.5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு: அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு 5X பாயிண்ட், மற்றவர்களுக்கு 3X பாயிண்ட், கூட்டாண்மையில் உள்ள வியாபாரிகளுக்கு 2X பாயிண்ட்.
ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு: Myntra-வில் 7.5% கேஷ்பேக் (ஒரு ஸ்டேட்மெண்ட் காலாண்டுக்கு ரூ.4,000 வரை), Flipkart மற்றும் ClearTrip-க்கு 5% கேஷ்பேக், குறிப்பிட்ட வியாபாரிகளுக்கு 4% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
HDFC மில்லினியா கிரெடிட் கார்டு: Amazon, Flipkart, Swiggy, Myntra உள்ளிட்ட பிளாட்ஃபார்ம்களில் 5% கேஷ்பேக், பிற செலவுகளுக்கு 1% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.