லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 20223ம் ஆண்டு வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறினார். நான் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தேன் அது எனக்கு ரொம்பவும் பிடித்து இருந்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபம் ஏனென்றால் லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை. அவர் என்னை சரியாக பயன்படுத்தாமல் வேஸ்ட் செய்துள்ளார் என கூறினார். சஞ்சய் தத் யோகேஷ் கனகராஜ் பற்றி பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது