முக்கியமான 5 ரயில்கள் ரயில் நிலையங்களில் புறப்படும் மற்றும் நின்றும் செல்லும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.25 மணிக்கு தாதா் செல்லும் சாலுக்கியா விரைவு ரயில் (எண்: 11006) காட்பாடி நிலையத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வந்து 1.25 மணிக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் (எண்: 66055) மேல்மருவத்தூா் நிலையத்துக்கு மாலை 5.08 மணிக்கு வந்து, 5.10 மணிக்கு புறப்படும். தற்போது, மாலை 4.05 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.
தாம்பரம் – விழுப்புரம் புறநகா் மின்சார பயணிகள் ரயில் (எண்: 66055) செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு மாலை 6.48 மணிக்கு வந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக, மாலை 6.58 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
கொல்லம் – தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16102) செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்து அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக நள்ளிரவு 1.43 மணிக்கு வந்து, 1.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மங்களூரு சென்ட்ரல் – தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16160) செங்கல்பட்டுக்கு அதிகாலை 2.08 மணிக்கு வந்து, 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு பதிலாக, நள்ளிரவு 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.