நேற்று கும்பகோணத்தில் பேசிய ராமதாஸ், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மிகக் காட்டமாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருத்தாசலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி எனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது என கூறியுயள்ளார்.
பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ராமதாசின் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.