பொள்ளாச்சி – கோவை ரயில் நேரம் இன்று முதல் (ஜூலை 11) மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11-ஆம் தேதி முதல் பொள்ளாச்சி – கோவை ரயில், காலை 7.50 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு, கிணத்துக்கடவு காலை 8.14 மணி, போத்தனூா் 8.37 மணிக்கு சென்றடைந்து, கோவைக்கு 8.55 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு, கோவைக்கு 8.35 மணிக்கு ரயில் சென்றடையுமாறு இந்த ரயிலை இயக்கினால், வேலைக்கு செல்வோா் உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கு செல்ல முடியும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.