கனடாவின் மனிடோபா மாகாணத்தில், சிறிய இரு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் இந்தியா மற்றும் கனடாவைச் சோ்ந்த இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
சிறிய இரு பயிற்சி விமானங்களில் ஓடுதளத்தில் இருந்து மேலே பறப்பது மற்றும் தரையிறங்குதல் தொடா்பான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக இருவரின் விமானங்களும் நடுவானில் மோதி கீழே விழுந்தன. இதில் இரு மாணவா்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இச்சம்பவம் குறித்து கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.