எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017ம் ஆண்டு வெளியானது. இப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பாகுபலி திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.
பாகுபலி படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் இணைத்து ‘பாகுபலி – The Epic’ என்ற பெயரில் வரும் அக். 31ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.