திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் பேசியதாவது :
அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்க போகிறாராம். பாஜகவிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ்.
தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர் இ.பி.எஸ். துரோகம் செய்வது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது.
கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என பாஜகவினரே பேச ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு எப்படி பயணம் மேற்கொள்கிறார் இ.பி.எஸ்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.