கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் அருகே ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்றது. இதில் மூன்று பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே கேட் கீப்பர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தக்கோலம் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் எண் 44 இல் பணியில் இருந்த ஊழியர் கார்த்திகேயன் மற்றும் சேந்தமங்கலம் ரயில்வே கேட் எண் 40 பணியில் இருந்த ஊழியர் ஆஷிஷ் குமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணிநேரத்தில் தூங்கியதால் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் ( மேற்கு ) உத்தரவிட்டார்.