சீனாவில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் குழந்தைகளுக்கான உணவில், உணவு பொருட்களுக்கு பதிலாக பெயிண்ட் கலந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின் உணவு, பார்ப்பதற்கு வண்ண மயத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த உணவை சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.