Saturday, July 12, 2025

தென்கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த டிசம்பர் மாதம் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அவசர நிலை உத்தரவை அவர் திரும்பப்பெற்றார்.

இதையடுத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்ற செயலில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதம் கைதான யூன் சுக் இயோல், பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் மூலம் யூன் சுக் இயோல் அதிபர் பதவியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளை அழிக்க முயன்றதாக யூன் சுக் இயோல் எதிராக நீதிமன்றத்தில் அரசு தரப்பு மனு தாக்கல் செய்தது. இதில், சுக் இயோலை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news