திருவாரூரில் வீடு, வீடாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார். திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் சன்னதி தெருவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டார்.