அமெரிக்காவில் விமானத்தில் பயணி ஒருவர் சக பயணியிடம் ‘என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு’ என்று தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வர்ஜீனியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் 27 வயது வாலிபர் ஒருவர், சக பயணியிடம் “என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு” என்று கூறியதை அடுத்து அவர் அவசரமாக தரையிறக்கி விடப்பட்டார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.