வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் போன்ற மற்றவர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் செயலிகளுக்கு இணையவசதி கட்டாயம் தேவை. இணையவசதி இல்லையென்றால், தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாது.
இந்த சூழலில் இணையவசதி இல்லாமல் இயங்கும் ’பிட்சாட்’ என்ற செயலியை ட்விட்டர் (தற்போது எக்ஸ்) இணை நிறுவனர் ஜாக் டார்ஸி அறிமுகம் செய்துள்ளார். இந்த செயலி மூலம் இணையவசதி, சிம் கார்டு இல்லாமல் தகவலை (மெசேஜ்) பரிமாறிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது பயனுக்கு வரும்?
பிட்சாட் செயலி தற்போது முழு சோதனையில் இருப்பதாகவும் விரைவில் ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்படும் என்றும் ஜாக் தெரிவித்துள்ளார். மேலும், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அடுத்தகட்டமாக வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.