அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 13 இடங்களில் நேற்று வெயில் சதமடித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பநிலையும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.