Wednesday, July 16, 2025

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் ஜோ பிடன் காலத்தில், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு, இதுவரை புதிய ராணுவ உதவி அறிவிக்கவில்லை. தற்போது உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அமெரிக்காவின் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news