Wednesday, July 16, 2025

சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 8, 2025) நடந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உதாரமங்கலம் அருகே, எதிர் திசையில் நாற்று ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த சென்னை சேர்ந்த குமார் (52), துர்கா (32), மற்றும் 3 வயது நிவேனி சூர்யா ஆகிய மூன்று பேரும் பாதையில் பலியானனர்.

விபத்தில் மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகிய மூன்று பேர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news