சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், அஜித்குமாரை போலீசார் அடித்து விசாரணை செய்தபோது, அவரது நண்பரும் ஆட்டோ டிரைவரான அருண் என்பவரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் தாக்கியதால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அருண் திடீரென அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த வீக்கம், ரத்தக்கட்டு, மற்றும் விரல் வலிக்கு சிகிச்சை மற்றும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு மருத்துவமனையில் உள் நோயாளியாக அருண் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.