Wednesday, July 16, 2025

மதுரவாயலில் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்

சென்னை மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர் ஆறுமுகம் போக்குவரத்து பணியில் இருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று ஆறுமுகத்தின் காலில் ஏறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் ஆறுமுகம் ஓட்டுநரை சரமாரியாக தாக்கி பூட்ஸ் காலால் உதைத்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் அயப்பாக்கத்தை சேர்ந்த ஆர்த்திஸ் (28) என்பதும், போக்குவரத்து காவலர் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியது குறித்து உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news