திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா, வரதட்சணை கொடுமை காரணாமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு திருப்பூர் முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி குணசேகரன் ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.