போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஜூன் 26-ஆம் தேதி இதே வழக்கில் நடிகா் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.