மா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாங்காய்களை கைகளில் ஏந்தியவாறு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துகு, பாஜக மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது, மாங்காய் டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும், கூட்டுறவு துறையில் மாம்பழத் தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாங்காய்களை கைகளில் ஏந்தியவாறு பங்கேற்ற பாஜகவினர், மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.