Saturday, July 12, 2025

புதுசா பவர் பேங்க் வாங்க போறீங்களா? முக்கியமா இதை கவனிக்கணும்

புதிய பவர் பேங்க் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் செல்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்ய பவர் பேங்க் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், சரியான பவர் பேங்க் தேர்வு செய்ய சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும்.

பேட்டரி திறன் (Battery Capacity)

உங்கள் மொபைல் அல்லது சாதனத்தின் பேட்டரி திறனைப் பொருத்து, குறைந்தது அதற்கும் இரட்டிப்பு திறனும் (mAh) கொண்ட பவர் பேங்க் தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, உங்கள் போனில் 4000mAh பேட்டரி இருந்தால், குறைந்தது 8000mAh திறன் கொண்ட பவர் பேங்க் வாங்குவது சிறந்தது.

வோல்டேஜ் மற்றும் அவுட்புட் (Voltage & Output)

உங்கள் சாதனத்திற்கு தேவையான வோல்டேஜ் மற்றும் அவுட்புட் பவர் பேங்கில் இருக்கிறதா என்று சரிபார்க்கவும். பொதுவாக, புதிய ஸ்மார்ட்போன்களுக்கு 5V அவுட்புட் தேவைப்படும். சில சாதனங்களுக்கு அதிக வோல்டேஜ் தேவைப்படலாம்.

போர்டுகள் எண்ணிக்கை (Number of Ports)

ஒரே நேரத்தில் பல சாதனங்களை சார்ஜ் செய்ய விரும்பினால், பல போர்டுகள் கொண்ட பவர் பேங்க் தேர்வு செய்யுங்கள். சில பவர் பேங்க்களில் பல வகை யுஎஸ்பி போர்டுகள், கூடுதல் கேபிள்கள் உள்ளன.

பில்ட் குவாலிட்டி மற்றும் பாதுகாப்பு (Build Quality & Safety)

தரமான லித்தியம்-பாலிமர் அல்லது லித்தியம்-அயன் பேட்டரி செல்கள் கொண்ட, BIS சான்று பெற்ற பவர் பேங்க் வாங்குவது பாதுகாப்புக்கு அவசியம். குறைந்த தரமான பேட்டரி செல்கள் உடைந்தோ, வெடித்தோ ஆபத்து ஏற்படும்.

பிராண்ட் மற்றும் நம்பகத்தன்மை (Brand & Reliability)

நம்பகமான பிராண்டை தேர்வு செய்யுங்கள். மதிப்பீடுகள், விமர்சனங்கள் பார்த்து வாங்குவது நல்லது. பவர் பேங்கில் சார்ஜ் எவ்வளவு உள்ளது என்பதை காட்டும் LED இன்டிகேட்டர் இருக்கிறதா என்று பாருங்கள். இது சார்ஜ் நிலையை எளிதில் தெரிந்து கொள்ள உதவும்.

எடை மற்றும் வடிவமைப்பு (Weight & Design)

அதிக திறன் கொண்ட பவர் பேங்க்கள் எடை அதிகமாக இருக்கலாம். பயணங்களுக்கு ஏற்ற வகையில் எடை குறைந்த மற்றும் கையிலே எளிதாக வைத்துக்கொள்ளும் மாதிரி தேர்வு செய்யுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news