கடந்த 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச்சென்றார். பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
வங்கி மோசடி தொடர்பாக நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் தீபக் மோடியை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டன. இந்நிலையில் அமெரிக்காவில் நேஹல் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். நேஹல் மோடியை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அமெரிக்கா கைது செய்துள்ளது.