Sunday, July 6, 2025

மாச கடைசியில காசு தங்கவில்லையா? இந்த டிப்ஸ்களை follow பண்ணுங்க! எக்கச்சக்க பணம் சேமிக்கலாம்!

ஒரு சிலர் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சேமித்தாலும் மாத கடைசியில் கையில் பணம் காலியாகிவிடும். இந்த சூழ்நிலையை பலரும் கடந்து வந்திருப்பார்கள். அடுத்த மாதம் இப்படி சிரமப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று Plan போட்டாலும், ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத செலவு ஏற்பட்டு விழிபிதுங்க வைத்துவிடும். இவற்றையெல்லாம் சமாளிக்க பணத்தை எப்படி சேமித்து வைப்பது என்பது பற்றி சில Tips தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நீங்கள் சம்பளம் வாங்கிய உடனே செலவு செய்யாமல் வருமானத்தில் குறைந்தது 20% சேமிப்பு அல்லது முதலீடுகளுக்காக எடுத்து வைத்துவிடுங்கள். மீதமுள்ள பணத்தைக் கொண்டு உங்கள் செலவுகளை செய்யலாம்.

அடுத்ததாக தேவைகளுக்கு 50%, வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பில் தொகைகள், குழந்தைகளின் கல்வி போன்ற தவிர்க்க முடியாத செலவுகளுக்காக 30%. மற்றும் பொழுதுபோக்கு, ஷாப்பிங், பயணம், ஹோட்டல் உணவு போன்ற உங்கள் விருப்பங்கள் மற்றும் சேமிப்புக்கு 20%. என்று திட்டமிட்டால் பிரச்சனை இருக்காது.

அடுத்ததாக, உங்களால் முடிந்தால் ‘அவசர நிதி’ என்ற பெயரில் 6 முதல் 9 மாதங்களுக்கான செலவுகளை சமாளிக்க போதுமான பணத்தை தயாராக வைத்திருப்பது மிகவும் சிறந்தது.

அடுத்த Tips கடன் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்துங்கள். அது கிரெடிட் கார்டாக இருந்தாலும் சரி… தனிநபர் கடனாக இருந்தாலும் சரி… அப்படியே வாங்க நேரிட்டாலும், முதலில் அதிக வட்டி கடனை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

அடுத்தகாக அது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும் கூட கூடிய சீக்கிரமாக முதலீடு செய்ய தொடங்குங்கள். அடுத்த Tips நம்பத்தகுந்த பொருத்தமான சுகாதார காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டைப் பெறுங்கள். கடைசியாக வருடத்திற்கு ஒரு முறை உங்கள் நிதியை மதிப்பாய்வு செய்யவும். உங்கள் முதலீடுகள் சரியாக செயல்படுகின்றனவா, உங்கள் செலவுகள் கைமீறி போகின்றனவா, நீங்கள் திட்டமிட்ட பாதையில் செல்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news