உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், பாகிஸ்தானில் தனது 25 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2023-க்கு பிறகு மைக்ரோசாஃப்ட் உலகம் முழுவதும் 9,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள அலுவலகமும் மூடப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்த முடிவு, பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரிய பின்னடைவாகவும், நாட்டின் வணிக சூழ்நிலை சரிவை பிரதிபலிப்பதாகவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.