தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு தேவையற்ற பதற்றத்தை குறைக்க சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.