Saturday, July 5, 2025

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.12 லட்சம் பரிசு.., எங்கே தெரியுமா?

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற கவலையில் சீன அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதியாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து இருக்கிறது . சீன அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு குழந்தை சட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

இந்த சூழலில் தான் சீனா அரசாங்கமும் சீனாவை சேர்ந்த பல்வேறு மாநில அரசாங்கங்களும் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்க நிதியுதவி வழங்குவது உள்ளிட பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் சீனாவின் ஹோஹாட் பகுதியில் இரண்டாவது குழந்தைக்கு 50,000 யுவான், மூன்றாவது குழந்தைக்கு 1 லட்சம் யுவான் (சுமார் ரூ.12 லட்சம்) வழங்கப்படுகிறது. மத்திய சீனாவின் தியான்மென் பகுதியில் இரண்டாவது குழந்தைக்கு 6,500 யுவான் மற்றும் குழந்தை மூன்று வயது வரை மாதம் 800 யுவான் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் குழந்தை வளர்ப்புக்கு நிதியுதவி, ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் பணி நேரத்தை குறைப்பது என தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு சீனா திட்டமிட்டிருக்கிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news