தொலைத் தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெலிகாம் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் மாறியுள்ளது.
குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா, வாய்ஸ்கால் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கி வருகிறது. இதன் காரணமாக மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மே 2025 மாதத்தில் மட்டும் ஜியோ 27 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் ஏப்ரல் மாதம் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டாலும் மே மாதத்தில் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது.