இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கப்போவதாக மைக்ரோடசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 6,000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அடுத்த சில நாட்களில் 300 பேரை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில் 9,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கான பணிநீக்க ஆணைகளை அனுப்ப தொடங்கிவிட்டதாகவும் மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது.