Friday, July 4, 2025

28 வயதான பிரபல கால்பந்து வீரர் கார் விபத்தில் பலி

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் தியாகோ ஜோட்டா (வயது 28) ஸ்பெயினில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த இந்த விபத்தில், அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தார். இந்த செய்தி கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜோட்டாவும் அவரது சகோதரரும் தங்களது காரில் சென்றபோது, மற்றொரு வாகனத்தை முந்தி செல்லுகையில் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து விலகி தீப்பிடித்து எரிந்தது. இதன் விளைவாக இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரேவின் மறைவுக்குப் பிறகு போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news