பாமகவில் இருந்து எம்.எல்.ஏ அருளை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று உத்தரவிட்டார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ அருள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாகவும் அன்புமணி அறிவித்தார்.
இந்நிலையில் அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. பாமக கொறடாவாக அருள் தொடர்வார். அருளுக்கு நிர்வாகக்குழு உறுப்பினர், இணை பொதுச்செயலாளர் பதவிகளை வழங்க உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.