சென்னை செம்மஞ்சேரியில் திறந்தவெளியில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டிய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர் மண்டலம், 200வது வார்டு செம்மஞ்சேரி ஜெவகர் நகரில் உள்ள காலி இடங்களில் சட்டவிரோதமாக அடிக்கடி கழிவுநீர் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டிய லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும், ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.