சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து விஜய் அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நாளை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் வருகிற 6.7.2025, ஞாயிறு அன்று சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.