வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. ஆளுங்கட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அவர் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஷேக் ஹசீனாவுக்கு தற்போது 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.