தாய்லாந்தில் 51 வயதான ஒரு பெண் ஒருவர் மீன் குழம்பு சாப்பிட்டபோது சிறிய மீன் முள் தொண்டையில் சிக்கியது. ஆரம்பத்தில் சிறிது வலி இருந்தாலும், அது சிறிது நேரத்தில் குறைந்ததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சில வாரங்கள் கழித்து, அவரது கழுத்தில் வீக்கம் மற்றும் வலி அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மீன் முள் அவரது தொண்டையை துளைத்து, கழுத்து தசையில் ஊடுருவி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து, அந்த மீன் முள்ளை பாதுகாப்பாக அகற்றினர். அதன்பின், அந்த பெண் முழுமையாக குணமடைந்தார்.
சாதாரண மீன் முள்தானே என நினைத்து புறக்கணிக்கக்கூடாது என்பதையும், தொண்டையில் எதாவது சிக்கினால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.