“எல்லோருக்கும் வீடு” என்ற இலக்குடன், மத்திய அரசு 2015-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் தான் பிரதமர் ஆவாஸ் யோஜனா – PMAY. இந்த திட்டத்தின் மூலம், இதுவரை 4.21 கோடி வீடுகள் மக்களுக்கு கட்டி வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் இரண்டு பிரிவுகளா இயங்குது: ஒன்று ,PMAY – நகர்ப்புறம். இன்னொன்று,PMAY – கிராமப்புறம். கிராமப்புற பகுதியில் மட்டும் இதுவரை 2.94 கோடி வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. நகரப்பகுதியில், 1.27 கோடி வீடுகள் கட்டத் தொடங்கப்பட்டு, அதில் 84 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2025-26 நிதியாண்டுக்காக மட்டும், மத்திய அரசு இந்தத் திட்டத்துக்காக ₹80,671 கோடி ஒதுக்கியிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகம்.
வீடு மட்டுமல்ல — அதோட சேர்ந்து, கழிப்பறை, மின்சாரம், குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நன்கு அமைக்கப்படுகின்றன.
முக்கியமாக இந்த திட்டத்தில்,பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வீடுகள் அவர்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் முன்னுரிமை பெறுகிறார்கள்.
வீட்டுக்கடனுக்கு வட்டி சலுகையும் உள்ளது. ₹18 லட்சம் வரை வீடு வாங்கும் கடனுக்கு குறைந்த வட்டி கிடைக்கும். இதன்படி, பயனாளிகள் ₹2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெற முடியும்.
நகர்ப்புறங்களில் குத்தகைக்கு வசிப்பவர்கள், புறம்போக்கு நிலத்தில் பல காலமாக வசிக்கும் குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்.
விண்ணப்பிக்க விரும்புவோர் pmaymis.gov.in என்ற இணையதளத்தில் Aadhaar எண்ணுடன் பதிவு செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அப்படி இல்லையென்றால் அருகிலுள்ள CSC அலுவலகங்களிலும்,அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளிலும் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.