இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மதவெறியை தூண்டும் வகையில் பேசக்கூடாது என உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுருந்தது.
இதையடுத்து நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.