விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை வெடி விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அடுத்த சின்னக்காமண்பட்டியில் கமல் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆலையில் 50 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்த நிலையில், சம்பவத்தன்று தொழிலாளர்கள் வழக்கம் போல வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பெரும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 6 பேர் வரை உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆலையின் போர்மேனை கைது செய்து வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.